ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் மனக்காட்டூர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் ராமகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக செல்போன் பார்த்து கொண்டே ராமகிருஷ்ணன் வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7-ஆம் தேதி நள்ளிரவு நேரமாகியும் ஏன் செல்போன் பார்த்து கொண்டிருக்கிறாய்? போய் தூங்கு என சுமித்ரா தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் தூங்க சென்ற ராமகிருஷ்ணன் சிறுது நேரத்தில் விஷம் குடித்து வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் ராமகிருஷ்ணனுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அந்த காதல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் ராமகிருஷ்ணன் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.