நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்து மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்