பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு லண்டனில் இருக்கும் கிங்ஸ்பரி என்ற சாலையில் இளைஞர்கள் இருவர் துப்பாக்கிசூட்டு தாக்குதலுக்குட்பட்டு காயமடைந்துள்ளனர். இதனை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்த ஒரு நபருக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது, கிங்ஸ்பரி என்ற பகுதியில் இரவு சுமார் 11:30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவசர சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவசர சேவை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது 17 வயதுடைய இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டு கிடந்துள்ளனர்.
அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மருத்துவச்சேவை குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் காயங்கள் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.