Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நோயாளி செய்த செயல்….. அதிர்ச்சியடைந்த மருத்துவர்…. போலீஸ் விசாரணை…!!

கொரோனா நோயாளி மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் தனி கட்டிடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குணா தயாகர் என்பவர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குணா தான் சிகிச்சை பெற்றுவந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து குணாவை பரிசோதனை செய்ய வந்த மருத்துவர் அவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |