கனடாவில் அதிக குளிரினால் நள்ளிரவில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள dawson creek என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த பெண் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய அவர் தன் சென்றடைவதற்குள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதாவது -41. 8 டிகிரியில் கடும் குளிரில் அப்பகுதி இருந்ததால் அதனை தாங்கிக்கொள்ளமுடியாமல் அப்பெண் உயிரிழந்துள்ளார். மேலும் அந்த பகுதியில் கடும் குளிர் காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அங்கிருக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.