Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பிரசவ வலியில் துடித்த பெண்….. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. மகிழ்ச்சியில் உறவினர்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் கிராமத்தில் புகழேந்தி- முத்துமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துமாரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ஒரு மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் முத்துமாரியை கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பிரசவம் பார்ப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் முத்துமாரி விருதாச்சலம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காடு அருகே சென்றபோது திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுனர் ஆம்புலன்ஸை சாலை ஓரமாக நிறுத்தியுள்ளார். இதனை அடுத்து மருத்துவ தொழில் நுட்புனர் ரேவதி முத்துமாரிக்கு பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |