கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்களப்பூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகில் மன்னார்சாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து விட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் கோவிலில் இருந்த சூலாயுதத்தை பிடுங்கி உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலின் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.