Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்மநபர்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அங்கன்வாடி மையத்திற்குள்  புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  தலக்காவயல்   கிராமத்தில்  அங்கன்வாடிமையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின்   கதவை உடைத்து நள்ளிரவு நேரத்தில்  உள்ளே புகுந்த  மர்ம நபர்  10 கிலோ அரிசி , முட்டை, சிலிண்டர் அடுப்பு மற்றும் குக்கர் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். மறுநாள் காலை அங்கன்வாடிக்கு சென்ற ஊழியர் முத்துக்கரசி  மர்ம நபர் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்துக்கரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அங்கன்வாடி மையத்தில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |