ஜவுளி கடையில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே முகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்த ஜவுளி கடையின் பூட்டை உடைத்து நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை திருடி சென்றனர். இதுகுறித்து முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி, நூர்முகமதுஆகிய 2 பேரும் ஜவுளி கடையில் திருடியது உறுதியானது. இதனையடுத்து நூர்முகமது மற்றும் பொன்னுசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.