டிராக்டரை திருடிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாயி கிராமத்தில் விவசாயியான பொன்னுசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 3 மர்ம நபர்கள் டிராக்டரை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து பிடிபட்ட 2 பேரையும் பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிராக்டரை திருடியவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயமுருகன் மற்றும் ராஜீவ்காந்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய செல்வவிநாயகம் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.