Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் பெய்த கனமழை…‌ வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்… சிரமத்தில் மக்கள்….!!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்துள்ளது. சித்பேட், சுல்தான்பேட், மஹரி போன்ற  பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை காரணமாகவும் போதிய வடிகால் அமைப்புகள் இல்லாததாலும் மழைநீர் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர்  புகுந்தது.இதனால், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானனர் . பெங்களூருவின் யலச்ஜனஹல்லி பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

Categories

Tech |