Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வந்து விடும்….. சுற்றி திரிந்த காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று புகுந்து விட்டது. இந்த காட்டு யானை தாக்கியதால் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் காட்டு யானை ஒன்று சாம்ராஜ் எஸ்டேட் பகுதி வழியாக தூதுர்மட்டம் மகாலிங்கா காலனியில் உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது.

இந்த காட்டு யானை சுமார் ஒரு மணிநேரம் அங்குமிங்கும் சுற்றி திரிந்து விட்டு மானார் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது இரவு நேரத்தில் மீண்டும் யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |