குடியாத்தம் பகுதியில் திடீரென்று ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது எல்லாம் காட்டில் உள்ள விலங்குகள் தங்களது உணவிற்காக வெளியில் வந்து விடுகின்றன. ஒருசில விலங்குகள் தங்களது இரைக்காக வீட்டிற்குள்ளேயே புகுந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இங்கு நடந்துள்ளது.
குடியாத்தம் அருகே கலர் பாளையம் கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென்று ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்தால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூன்றுபேரை சிறுத்தை தாக்கியது. பின்னர் அவர்கள் வனத்துறைக்கு தகவல் அனுப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். மேலும் வீட்டில் இருந்த மூவருக்கும் காயம் ஏற்பட்டது.