நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரடிசித்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கியம்மாள்(30) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஆரோக்கிய ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் பின்புறம் வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஆரோக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
இதனால் கண்விழித்த ஆரோக்கியம்மாள் தங்க சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு ஆரோக்கியராஜ் ஓடி வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தம்பி சென்றார். இதுகுறித்து ஆரோக்கியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.