சென்னை விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஆறு அடுக்கு கார் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பெரிதாக பயன்படும் வகையில் இந்த கார் நிறுத்தம் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால் கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதன் வேலைகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த விமான நிலைய புதிய கார் நிறுத்தம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கு கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பழைய கட்டடம் 30 நிமிடங்களுக்கு 40 ரூபாய் வசூலித்த நிலையில் புதிய கட்டிடம் 75 ரூபாயாக உயர்ந்துள்ளது.