சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர். மெரினாவில் ஆக்கிரமிப்பு குறித்து பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ள செய்திகளை சுட்டிக்காட்டி அதை எப்படி சரி செய்ய போகிறீர்கள் என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மெரினாவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாகவும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீனவர் சங்க தலைவர்கள் உதவி ஆணையருடன் ஆலோசித்து ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஆணையர் திரு. பிரகாஷ் மெரினாவில் அனுமதி வழங்கினால் ஏராளமான மக்கள் கூடிவிடுவார்கள் எனவும். மெரினாவில் மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மெரினாவில் நவம்பர் மாதம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் மெரினாவை தூய்மையாக வைக்க ஏதுவாக கடற்கரையில் தினமும் காலை மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் படி சென்னை மாநகராட்சி ஆனை இருக்கும் காவல்துறை ஆணையர் இ க்கும் அறிவுறுத்தினார் வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் அன்றைய தினமும் காணொளியில் ஆஜராக இரு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினர்