திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசனத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நவம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டை tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதனைப் போலவே ஆர்ஜித சேவை, கல்யாண உற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.