தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா நடிப்பில் உருவான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் கடந்த மே 20-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இயக்குனர் ராம் சுப்பிரமணியன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஜி.எம்.குமார், அருள்தாஸ், பசுபதி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த கிரைம் திரில்லர் தொரடின் கதை மற்றும் இந்த படத்தில் நடித்தவர்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் நவம்பர் ஸ்டோரி வெப் தொடரை மில்லியன் கணக்கான இந்தியர்கள் இந்த வார இறுதியில் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த நடிகை தமன்னா ‘நவம்பர் ஸ்டோரி பார்வையாளர்களிடமிருந்து பெற்றுத் தந்த அன்பு மற்றும் பாராட்டு மிகுந்த ஊக்கமளிக்கிறது. வெப் சீரிஸ்கள் நல்ல கன்டென்டுடன் வழங்கப்படும் போது அதற்கு முழு அளவில் மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெப் தொடரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளும் போது நல்ல கதை களத்திற்கு மொழி ஒரு தடையில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது’ எனக் கூறியுள்ளார்.