Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் சிறப்பு ரயில்கள் நேரம் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

நவம்பர் முதல் சில சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . அதன்படி நவம்பர் 4 முதல் மதுரையில் புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06655) மானாமதுரையில் இரவு 7.30, சூடியூரில் 7.42, பரமக்குடியில் 7.55, சத்திரக்குடியில் 8.10, ராமநாதபுரத்தில் 8.25, உச்சிப் புளியில் 8.47, மண்டபத்தில் 9.02, பாம்பனில் 9.20 மணிக்கு பதில் முறையே இரவு 7.15, 7.25, 7.40, 7.56, 8.10, 8.32, 8.52, 9.10 மணிக்கு புறப்படும். புனலுார் – மதுரை சிறப்பு ரயில்(06730) நவம்பர்  1 முதல் விருதுநகரில் அதிகாலை 3.15 மணிக்கு பதில் அதிகாலை 3 மணிக்கு புறப்படும்.

சென்னை – கொல்லம் சிறப்பு ரயில் (06101) நவம்பர் 1 முதல் திண்டுக்கல்லில் நள்ளிரவு 11.40, மதுரையில் 12.45 மணிக்கு பதிலாக முறையே 11.05, 12.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லம் – சென்னை சிறப்பு ரயில் (06102) திண்டுக்கல்லில் இரவு 8.10 மணிக்கு பதில் இரவு 8.05 க்கு புறப்படும். நவம்பர் 4 முதல் புவனேஸ்வர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (08496) திருச்சியில் மாலை 4.25, புதுக்கோட்டையில் 5.15, காரைக்குடியில் 6.30, தேவகோட்டை ரோட்டில் 6.38, சிவகங்கையில் இரவு 7.05, மானாமதுரையில் 7.45, பரமக்குடியில் 8.10, ராமநாதபுரத்தில் 8.35 மணிக்கு பதிலாக முறையே மாலை 4.15, 5.05, 5.55, 6.04, 6.35, இரவு 7, 7.25, 7.5 மணிக்கு புறப்படும்.

Categories

Tech |