தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வர இருப்பதால், நோய்த்தொற்று பரவாமல் கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மேலும் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல அனுமதி. கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இன்று முதல் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி. தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருள் காட்சிகளுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.