Categories
சென்னை மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் தான் அனுமதி…. பொதுமக்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகள் வழங்குவது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நவம்பர் 1 கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகள் நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளன.

அதனால் இன்று கடற்கரைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தான் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இன்று கடற்கரைக்கு வரவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 24, 31 ஆகிய தேதிகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை உள்ளது. தடையை மீறி பொதுமக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |