Categories
சென்னை மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் திறப்பு…. இனி இந்த பிரச்சனை இருக்காது…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!!

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பேருந்து நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா பாதிப்பால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட் டது. இதை தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது. ஜெய்நகர் பூங்காவில் தொடங்கி தே.மு.தி.க. அலுவலகம் முன்பு வரை கட்டப்பட்டுள்ளது. புதிய மேம்பால பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலம் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.இனி கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |