தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பள்ளிகள் திறந்த முதல் 15 நாட்களுக்கு பாடங்கள் நடத்தாமல், மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆடல், பாடல் மற்றும் விளையாட்டு போன்ற கல்வியை கற்பிக்க உள்ளதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.