நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து இமாச்சல பிரதேச அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்வித் துறைக்கு கீழ் இயங்கும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 1 முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கபடாது என்றும்ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை என்பதால் மொத்தம் ஏழு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்திலும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 7 வரை பள்ளிகள் மூடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.