புதுச்சேரி மாநிலத்தில் தளங்களுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் பரவி வந்த தொற்று பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இன்னும் சில மாநிலங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தான் உள்ளது. தொடர்ந்து அந்தந்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரியில் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி முதல் அமல்படுத்தப்படும். நாளை முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள், கோவில்கள், திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.