மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கு முன்பே சரியான சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக்க பின்பற்றுமாறு முதல்வர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மக்கள் முகக்கவசங்களை முறையாக அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.