திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதை காண அனைத்து மாவட்டங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
இதையடுத்து கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. வருகின்ற 23 ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. அதன் முக்கிய நிகழ்வாக நவம்பர் 19ஆம் தேதி மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் உச்சியில் மகாதீபம் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.