Categories
மாநில செய்திகள்

நவம்பர் 19-ல் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு  அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் 10, 11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதேசமயம் தனித்தேர்வர்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 10 ஆம் வகுப்பு துணை தேர்வு கடந்த செப்டம்பர் 16 முதல் 28 ஆம் தேதி வரை நடந்தது.

அந்த தேர்வின் முடிவுகள் வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்  தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று முதன்மை கல்வி அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Categories

Tech |