ரயில்வேயில் பயணச்சீட்டு முன்பதிவு தர மேம்பாட்டு மற்றும் புதிய எண்கள் புதுப்பித்தல், ரயில்வே பயணிகள் முன்பதிவு சேவை அடுத்த 7 நாட்களுக்கு இரவு 11.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நிறுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் பயணச்சீட்டு முன்பதிவு உள்ளிட்ட சில சேவைகள் இயங்காது. நாட்டில் பயணிகள் ரயில் சேவை கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரயில்வே பயணிகள் முன்பதிவு சேவை அடுத்த 7 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது.
இந்த நடவடிக்கை நேற்று இரவு முதலே அமலுக்கு வந்தது. நவம்பர் 21 ஆம் தேதி அதிகாலை வரை நடைபெறும். அப்போது புதிய ரயில்கள் புதுப்பித்தல் மற்றும் புதிய தரவு மேம்படுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. மேலும் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை பயணிகள் முன்பதிவு சேவைகளான டிக்கெட் முன்பதிவு, நடப்பு முன்பதிவு,டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் விசாரணை போன்றவை கிடையாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.