மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்த மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கம் உறுதியாகத் தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று டிராக்டர் போராட்டம் நடத்தியதில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். அதனால் போராட்டங்களை நீடிப்பது குறித்து போராடக்கூடிய விவசாயிகள் சங்கம் ஆலோசனை நடத்தியது. அதன் முடிவில் வருகின்ற நவம்பர் 22 ஆம் லக்னோ பேரணியும், 26 ஆன் தேதி விவசாயிகளின் ஓராண்டு நிறைவு போராட்டம்பாராளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்கள் முழுமையாகத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.