பூமியின் வளிமண்டலத்தை சிறுகோள் ஒன்று நவம்பர் 29 அன்று தாக்க உள்ளதாக எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பூமியை கடந்து செல்லும் சிறு கோள்களின் தாக்குதலையும் நாம் சந்திக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது 0.51 கி.மீ விட்டம் மற்றும் துபாயின் புர்ஜ் கலிபா அளவு உயரமான சிறுகோள் ஒன்று பூமியின் 4,302,775 கி.மீ தூரத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகோளுக்கு 153201200 WO107 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் நவம்பர் 29 அன்று பூமியைக் கடக்கும் என்றும் நாசா உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அது தற்போது 56 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடைய அளவு 370மீ – 820மீ வரை இருக்கும் என்பதால் இதன் வரவு திகிலூட்டும் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறுகோளானது நவம்பர் 29, 2000 அன்று நியூ மெக்சிகோவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த வருடத்திலிருந்து அவர்கள் அதை கண்காணித்து வந்துள்ளனர்.
இந்த சிறுகோளின் அளவு மற்றும் நீளத்தை கொண்டு நிச்சயமாக நாம் பயப்படுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. இந்த குறிப்பிட்ட சிறுகோள் பூமிக்குள் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்தினால் நமக்கு பேரழிவைத் தரும். ஆனாலும் இதில் மகிழ்ச்சியான செய்தியாக நாசா, சிறுகோள் ஒன்று பூமியை தாக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது. நாசாவின் கூற்றுப்படி, இந்த விண்கற்கள் சூரிய மண்டலத்தில் தொடக்கதிலிருந்து உருவான மீதம் உள்ள பாறைகள் மற்றும் காற்றற்ற எச்சங்கள் என்று கூறியுள்ளது.