நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்தை சேவைக்கும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொறடா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஏர் பபுள் முறையில் 28 நாடுகளுக்கு தற்காலிக வெளிநாட்டு விமான சேவை நடைபெறுகிறது. இந்த நடைமுறை தொடரும். சரக்கு விமானங்களுக்கு தடை இருக்காது. வெளிநாடுகளிலிருந்து வரும் வர்த்தக விமானங்களுக்கான தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.