Categories
சென்னை மாநில செய்திகள்

நவம்பர் 5ஆம் தேதி பொது விடுமுறை…. கடைகள் எதுவும் இயங்காது…. திடீர் அறிவிப்பு….!!!!

சென்னையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனை செய்ய வருகின்றன.  இந்த நிலையில்சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1900- க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடுவார்கள். அதனால் நவம்பர் 5 ஆம் தேதி சந்தைக்கு காய்கறிகள் வராது. அதன் காரணமாக சந்தைக்கு விடுமுறை விட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |