சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு நவம்பர் 5ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் வருகிற எட்டாம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு நவம்பர் 5 முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த 29ஆம் தேதி பருவமழை தொடங்கியதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. அதனால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி வருகிற ஐந்தாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 5 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் கூறியுள்ளனர்.