சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும்.வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது.
சென்னையில் மாலை 5.38 மணிக்கு சந்திரன் உதயமாகும் . எனவே முழு சந்திர கிரகணத்தை யாரும் காண இயலாது. ஆனால் 5.38 மணியிலிருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடு வானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம். இந்த முறை 99.1% சந்திரன் பூமியின் குடைக்குள் செல்வதால் நிலவு சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இந்த சிவப்பு கிரகணத்தை ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வட கிழக்கு ஐரோப்பா, பசிபிக், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக், ஆர்டிக், அண்டார்டிகா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இருந்தும் காணலாம்.