நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில மாநிலங்கள் மட்டுமே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் நவம்பர் 8ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து புதுச்சேரி அரசு நடத்திய ஆலோசனையில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்ததும் நவம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.