தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் கிழக்கு பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்களை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.