Categories
சினிமா தமிழ் சினிமா

‘நவரசங்களின் மறுபக்கம்’… வைரலாகும் ‘நவரசா’ டீசர் மேக்கிங் வீடியோ…!!!

‘நவரசா’ வெப் தொடரின் டீசர் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். 9 முன்னணி இயக்குனர்கள் இணைந்து தனித்தனியாக உருவாக்கியுள்ள குறும்படங்களில் தொகுப்பு தான் நவரசா. கோபம், கருணை, சிரிப்பு, காதல், அமைதி போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த்சாமி, ரேவதி, பார்வதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

சமீபத்தில் இந்த வெப் தொடரின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நவரசா டீசர் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வெப் தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி நெட்பிளிக்ட்ஸில் ரிலீசாக உள்ளது.

Categories

Tech |