நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்துள்ள எதிரி படத்திலிருந்து ‘யாதோ’ பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. கோபம், சிரிப்பு, காதல், வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம், போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சித்தார்த், அதிதி பாலன், அரவிந்த்சாமி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
#Yaadho song from #Edhiri ( #Navarasa )https://t.co/YxQ9KsWmpZ
A #GovindVasantha Musical
A @nambiarbejoy film
✍️@madhankarky
🎤@Chinmayi @prakashraaj #Revathy @Netflix_INSouth #ManiSir @JayendrasPOV @thinkmusicindia— VijaySethupathi (@VijaySethuOffl) July 14, 2021
மேலும் இந்த தொடருக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்திக், ஜிப்ரான், ரான் ஈதன் யேஹன், அருள்தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் நவரசா வெப் தொடரின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து கௌதம் மேனன் இயக்கிய ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ படத்தில் இருந்து ‘தூரிகா’ என்ற பாடலும், சர்ஜுன் இயக்கிய ‘துணிந்த பின்’ படத்தில் இருந்து ‘ஒசர பறந்து வா’ பாடலும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘எதிரி’ படத்திலிருந்து ‘யாதோ’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.