Categories
சினிமா தமிழ் சினிமா

‘நவரசா’ ஆந்தாலஜி… ‌கௌதம் மேனன்- சூர்யா இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நவரசா ஆந்தாலஜி தொடரில் கௌதம் மேனன்- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சித்தார்த், அதிதி பாலன், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Navarasa' To Hit The Screens With Star Cast .. Will It Meet The  Expectations Of The Fans? - Jsnewstimes

மேலும் இந்த தொடருக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்திக், ஜிப்ரான், ரான் ஈதன் யேஹன், அருள்தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிரயாகா மார்டின் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் கௌதம் மேனன்- சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நவரசாஆந்தாலஜி தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |