‘நவரசா’ தொடரில் கௌதம் மேனன்- சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கிட்டார் கம்பி மேலே நின்று படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், சர்ஜுன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சித்தார்த், அதிதி பாலன், அரவிந்த்சாமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
For Navarasa, from ‘ Guitar kambi mele nindru’, here’s the next song.
Alai alaiyaga… is short and sweet. #Navarasa @NetflixIndia @Suriya_offl @thinkmusicindia— Gauthamvasudevmenon (@menongautham) July 16, 2021
மேலும் இந்த படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்திக், ஜிப்ரான், ரான் ஈதன் யேஹன், அருள்தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் நவரசா வெப் தொடரின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் சூர்யா- கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள கிட்டார் கம்பி மேலே நின்று படத்தில் இடம்பெற்ற ‘அலை அலையாக’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து தூரிகா என்ற பாடல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.