Categories
அரசியல்

நவராத்திரியின் முக்கியத்துவம்…. 10 நாட்கள் ஏன் கொண்டாடப்படுகிறது?….. இதோ புராண வரலாறு….!!!!

இந்தியா முழுவதும் பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை தான் நவராத்திரி.இந்த வருடம் நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் நான்காம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு பருவங்களில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். அதாவது வசந்த நவராத்திரி, வசந்த உற்சவம் மற்றும் பசந்த பஞ்சமி என்ற பல்வேறு பெயர்களில் பத்து நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். உலகையே அச்சுறுத்திய மகிஷாசுரன் என்ற அரக்கனை துணிச்சலாக எதிர்த்து அவனை வீழ்த்திய துர்கா தேவியின் சக்தியை வழிபட்டு கொண்டாடும் நாள்தான் இந்த நவராத்திரி.

அப்போது ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியை ஒவ்வொரு அவதாரமாக வழிபாடு செய்வார்கள்.இந்த ஒன்பது நாட்களின் வழிபாட்டில் நம் வாழ்வை சூழ்ந்திருக்கும் அனைத்து தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றலும் நீங்குவதற்கு அன்னை பராசக்தியின் அருள் பெற வேண்டி தினமும் வழிபாடு செய்வார்கள்.

அது மட்டுமல்லாமல் உலகத்தில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்ட காலத்தில் மக்களை அழிவில் இருந்தும் உலகமே அழிந்து போகாமலும் அன்னை பராசக்தி தான் காப்பாற்றினார் என புராணம் கூறுகிறது. அதனால் அன்னை பராசக்தியின் ஆசையை முழுவதுமாக பெறுவதற்கு 9 நாட்களும் விதவிதமாக பூஜை கொண்டாடப்படும். இந்த நாட்களில் மிகவும் முக்கியமான அம்சம் கொலு வைப்பது தான். கொலு வைப்பவர்களுக்கு நவராத்திரி மிகவும் குதூகலம் நிறைந்த நாட்களாக இருக்கும்.

Categories

Tech |