குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது இளம்பெண்கள் சிலர் கொரோனா கவச உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இளம்பெண்கள் சிலர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா கவச உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். மேலும் இந்த கவச உடை நடனம் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இளம் பெண்களின் இந்த சமூக நலன் குறித்த எண்ணம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.