நவராத்திரி சோழர்கள் காலத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் அம்பிகைக்கு 9 விதமான புஷ்பங்களை கொண்டு 9 விதமான அலங்காரங்கள் செய்யப்படும். வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவது வழக்கம்தான். நவராத்திரி விரதம் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று.இந்த ஒன்பது நாட்களும் விரதத்தை முறையாக கடைப்பிடித்து பூஜை செய்தால் வீட்டில் லட்சுமி தங்கும், செல்வம் பெருகும் என்பது.வீட்டில் கொலு பொம்மை வைப்பவர்கள் மூன்று படிகள் முதல் 11 படிகள் வரை அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளலாம்.
கொலு வைப்பதற்கான முக்கிய காரணம் படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர வேண்டும் என்பதுதான். அப்படி குழு பொம்மையை எடுக்கும்போது முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கொலு படியின் ஒவ்வொன்றிலும் ஓரறிவு,ஈரிரவு மற்றும் மூவறிவு உயிரினங்களை வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.இந்தப் படியில் எந்த குழப்பமும் கொள்ளாமல் முறையாக வரிசை படுத்த வேண்டும்.
ஒருவேளை உங்களால் கொலு வைக்க முடியவில்லை என்றால் சாதாரணமாக நாம் வீட்டில் வைத்து வழிபடும் தெய்வங்களுக்கு பூ அலங்காரங்கள் செய்து நவராத்திரி விழாவில் 9 நாட்களிலும் தானியங்களை வேக வைத்து இறைவனுக்கு படைத்து வழிபடலாம். மேலும் கொலு முதல் படியில் மரம், செடி மற்றும் கொடி என ஓரறிவு உயிரினங்களையும் இரண்டாவது படியில் ஈரறிவு உயிரினங்களான சங்கு போன்றவற்றை வைக்கலாம்.
மூன்றாவது படியில் மூவறிவு உயிரினங்களான கரையான் மற்றும் எறும்பை வைக்க வேண்டும். நான்காவது படியில் நான்கறிவு உயிரினங்கள் நண்டு மற்றும் நத்தை, ஐந்தாவது படியில் பறவைகள் மற்றும் விலங்குகள், ஆறாவது படியில் திருமணங்கள், மனிதர்கள், வியாபாரம் மற்றும் நடன பொம்மைகள், ஏழாவது படியில் மகான்களின் பொம்மைகள், எட்டாவது படியில் தசாவதாரம் மற்றும் அஷ்டலட்சுமி பொம்மைகள்,ஒன்பதாவது படியில் பார்வதி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் பொம்மைகளை வைத்து வழிபடலாம்.