ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழா 9 நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொலு வைத்து சிறப்பிக்கப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் எதையெல்லாம் செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
நவராத்திரிக்கு கொலு வைப்பவர்கள் காலை மாலை என்று இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நெய்வேத்தியம் செய்து வழங்க வேண்டும். எந்த நாள் எந்த உணவு செய்து படைக்கலாம் என்பதற்கு ஒரு தனி பட்டியலும் உள்ளது. அதற்கு ஏற்றது போல தவறாமல் விளக்கேற்றி கற்பூரம் காண்பிக்க வேண்டும். அம்பாலின் திருவுருவப் படங்களை பூஜை செய்து தினமும் நெய்வேத்தியம் செய்து வழிபடுவது நல்லது.
அதன்படி கொலுப்படிகள் மூன்று, ஐந்து மற்றும் ஏழு என ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.படிகளின் எண்ணிக்கையை கீழிருந்து மேலாக ஒன்று இரண்டு என்று எண்ணக்கூடாது.எத்தனை படிகள் வைத்தாலும் மேற்படியில் கடவுளின் சிலையை தான் வைக்க வேண்டும் என்பது புராண வரலாறு. எனவே இந்த முறையை பயன்படுத்தி வீட்டில் கொலு வைக்கலாம்.
கொழு வைக்கும் முறை:
முதல் படி: மரம், செடி, கொடி, பூக்கள்
2ஆம் படி: நத்தை, சங்கு, ஈரறிவு உயிரினங்கள்
3ஆம் படி: கரையான், எறும்புகள் போன்றவை
4ஆம் படி: பூச்சி வகைகள், ஊர்வன
5ஆம் படி: பறவைகள், விலங்கினங்கள்
6ஆம் படி: மனிதர்களின் பொம்மைகள்
7ஆம் படி: சித்தர்கள், மகான்களின் பொம்மைகள்
8ஆம் படி: அஷ்டலக்ஷ்மி, தசாவாதாரம்
9ஆம் படி: கலசம், மூர்த்திகள் விநாயகர்