தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அரியநல்லூர் தெருவில் முப்பிடாதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 10-ஆம் நாளான நேற்று முன்தினம் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Categories