Categories
அரசியல்

“நவராத்திரி சிறப்பு பூஜை” 108 முறை இதை சொல்லி பாருங்கள்…. நன்மைகள் பல நடக்குமாம்…..!!!

நவராத்திரி விழா வருகிற 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மா துர்காவின் அருளை பெற நவராத்திரி விழாவை பக்தியுடன் கொண்டாட வேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சனைகள் உண்டாகும். இதனால் உருவாகும் எதிரிகளை சமாளித்து முன்னேறுவது பெரிய சிக்கலாக இருக்கும். இந்நிலையில்  எதிரிகள் விலகி, துன்பங்கள் நீங்கி வாழ்வில் நன்மைகளும், மகிழ்ச்சியும் அதிகரிக்க பஞ்ச துர்க்கை அம்மன் வழிபாடு செய்வதும், அம்மனுக்குரிய மந்திரத்தை சொல்லி வழிபடுவது நல்லது.

அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று மாலை இந்த மந்திரத்தை சொல்வது கூடுதல் விசேஷமானது. துர்க்கை என்றால் யாராலும் வெல்ல முடியாதவள் என்று பொருள். இந்த துர்க்கை அம்மன் தன்னை வழிபடுவோருக்கு வேண்டிய வரங்களையும், அளப்பறிய நற்பலன்களை அள்ளித்தரக்கூடியவள், எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலையும், திறமையையும் வழங்குபவள்.
மூல மந்திரம்..
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்
பொருள்:
காத்யாயனய என்ற மகரிஷிக்கும் மகளாக பிறந்தவளே, என்றும் இளம் குமரியாக இருப்பவளே உன்னை வணங்குவோரின் மன குழப்பத்தை நீக்கி, நல்லறிவை கொடுத்து அதன் மூலம் பல நற்பலன்களை அருளக்கூடிய துர்க்கை அம்மனின் பாதத்தைப் பணிகிறோம்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகள் அம்மனுக்கு உகந்த கிழமைகள். இந்த மந்திரத்தை சொல்லும் போது குளித்து, உடல், மனம் தூய்மையோடு இந்த மந்திரத்தை 108 முறை கூறவும்.
இந்த மந்திரத்தை தொடர்ந்து கூறி வந்தால் மனக் கலக்கம் நீங்கி, எதையும் சாதிக்கும் ஆற்றலும், மன உறுதியும் உண்டாகி எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி பிறக்கும்.

Categories

Tech |