தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதற்காக பேருந்து மற்றும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகளும் ரயில்வே சார்பாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பண்டிகை கால ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்த நிலையில், சொந்த ஊர் சொல்லும் மக்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய ரயில் நிலையங்களில் கூட்டங்களை கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.