நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
லலிதா சகஸ்ரா நாமம் என்ற ஆயிரம் திருநாமங்களை அனைவராலும் உச்சரிக்க முடியாது. அதற்கு பதிலாக நாம் காஞ்சி மகா பெரியவர் அருளிய ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி என்ற மந்திரத்தை உச்சரித்தால் பல நன்மைகள் நடக்கும்.
ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
இந்த நாமாவளியை காலையிலும், மாலையிலும் 16 முறை மனதார கூறினால் பல நன்மைகள் நடக்கும்.