Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” துர்கையின் 9 வடிவங்கள்….. சிறப்பு மந்திரத்தின் பலன்கள்….!!

நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நவதுர்கை என்பது துர்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும்.

இந்நிலையில் துர்கை அம்மன் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவங்களில் உள்ளார். செல்வம், கல்வி, வீரத்தின் அதிபதியான நவதுர்கையை நவராத்திரி நாட்களில் முறையாக பூஜை செய்து வழிபட்டு வந்தால், நம் வறுமை, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, செல்வம் அதிகரிக்கும். மேலும் மன தைரியம் அதிகரித்து, முக்கியமாக கல்வி திறன் மேம்படும்.

காத்யாயனி மந்திரம்:

“ஓம் காத்யாயனி மஹாமாயே மஹாயோகினியாதீஷ்வரி
நந்த் கோபு சுதம் தேவி பதிம் மே குரு தே நமஹ்.”

அல்லது

“சந்திரஹசோஜ்வலகர ஷர்துல்வர்வஹ்னா காத்யாயநி ஷுபம் தத்யாதேவி தானவகாதினி”

காத்யாயனி மந்திரத்தின் பலன்கள்:

பராசக்தியின் ஒரு அம்சமான ஸ்ரீ காத்யாயனி தேவிக்குரிய இந்த மந்திரத்தை தினமும் காலை 27 முறை துதிப்பது மிகவும் நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் வீட்டில் இருக்கும் அம்பாள் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தீபமேற்றி இம்மந்திரத்தை 108 முறை 1008 வரை உரு ஜெபிப்பதால் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

காத்யாயனி மந்திரத்திற்கு பிறந்த ஜாதகத்தில் இருக்கும் குஜ அல்லது மங்கள தோஷத்தை நீக்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. மாங்கல்ய தோஷம் திருமணத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களையும் உருவாக்குகிறது. திருமணமான தம்பதிகளும் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் உறுதிப்படுத்தவும், விரைவில் குழந்தை பிறக்கவும் காத்யாயனி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் பயனடையலாம்.

Categories

Tech |